லியோ வெற்றி விழாவில் தங்க நாணயங்கள் பரிசு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழா, நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில், படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 'LEO' என பொறிக்கப்பட்ட தங்க நாணயம் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு வருகிறது.