சென்னையில் தொடங்கும் ‘லியோ’ படப்பிடிப்பு.. புதிய அப்டேட்

leo

விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக பணியாற்றி வருகிறார். 

leo

முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கிய நிலையில் அங்கு விஜய், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த படத்திற்காக பணியாற்றியுள்ளனர். மொத்தம் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்பினர். 

leo

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது. பிரசாத் ஸ்டுடியோவில் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் அடுத்தக்கட்டமாக ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் தொடங்குகிறது. அங்கு ஏர்போர்ட் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. பின்னர் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும் என்று கூறப்படுகிறது. 

 

Share this story