இங்கிலாந்து நாட்டில் அதிரடி காட்டும் லியோ

இங்கிலாந்து நாட்டில் அதிரடி காட்டும் லியோ

இங்கிலாந்தில் லியோ படத்திற்கு தற்போதே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்று மாலை படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

இங்கிலாந்து நாட்டில் அதிரடி காட்டும் லியோ

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் படத்துக்கு, தற்போதே 40,000க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதாக, அந்நாட்டில் படத்தை வெளியிடும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this story