லியோ நிகழ்ச்சிகள் ரத்து... லோகேஷ் கனகராஜ் காயம்...

லியோ நிகழ்ச்சிகள் ரத்து... லோகேஷ் கனகராஜ் காயம்...

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

லியோ நிகழ்ச்சிகள் ரத்து... லோகேஷ் கனகராஜ் காயம்...

இதனிடையே கேரள மாநிலம் பாலகாட்டில் உள்ள அரோமா திரையரங்கில் ஒளிபரப்பான லியோ திரைப்படக் காட்சியை காண இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக அதிகளவில் கூட்டம் கூடியதால், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், காயம் காரணமாக கேரளாவில் லோகேஷ் பங்கேற்க இருந்த இரண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
 

Share this story