கர்நாடகா, கேரளாவில் லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி
1697339642248

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. வரும் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிற மாநில விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.