விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு லியோ படக்குழு இரங்கல்

விஜய் ஆண்டனி மகள் மறைவு.... லியோ படக்குழு எடுத்த முடிவு....

விஜய் ஆண்டனியின் மகள் மறைவால் லியோ பட போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு படிக்கும் அவர் கடந்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சளில் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இச்செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதலப்பக்கங்களிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

null


இந்நிலையில், 'லியோ' படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Share this story