‘படம் நல்லா ஓடனும் சாமி…’- படக்குழுவுடன் திருப்பதி மலையேறிய லோகேஷ் கனகராஜ்.

photo

கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் தற்போது தளபதி விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கியுள்ளார். படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படக்குழுவுடன் சாமிதரிசனம் செய்ய  திருப்பதிக்கு மலையேறியுள்ளார்.

photo

விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் ரிலீசுக்கு தயாராக உள்ள லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உர்சாகத்தில் ஆழ்த்தும் நிலையில் நேற்று இன்னும் கூடுதலான மகிழ்ச்சியாக  படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. படத்தை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளி நாடுகள் என படத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் படம் நல்லா ஓடனும் சாமி என வேண்டி, லோகேஷ் கனகராஜ்,  ரத்னகுமார் மற்றும் படக்குழுவினர் திருப்பதிக்கு மலையேறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் என போலிசார் எச்சரிக்கும் நிலையில் தகுந்த பாதுகாப்புடன் அவர்கள் மலைப்பாதையில் ஏறியுள்ளனர்.


 

Share this story