லண்டன் பேருந்துகளில் லியோ விஜய் போஸ்டர்... அனல் பறக்கும் புரமோஷன்...

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோசன்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தற்போது லியோ படத்தின் புரமோசன்களை தொடங்கி இருக்கின்றனர். இங்கிலாந்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை லியோ படத்தின் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள பேருந்துகளில் லியோ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.
#thalapathi vijay in #leo advertisement in London bus.. vera level promotion pic.twitter.com/xjYMRoOyDV
— Chinna Chinna Asai (@chennaitodaynew) October 10, 2023
இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள அகிம்சா நிறுவனம் இங்கிலாந்து மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் லியோ படத்திற்கான புரமோசன்களை தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் லண்டன் பேருந்தில் லியோ விஜய் இடம் பெற்றுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.