கேரளாவில் சாதனை நிகழ்த்திய லியோ திரைப்படம்
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் லியோ திரைப்படம் புதிய சாதனை நிகழ்ச்சி உள்ளது. அதன்படி, கேரள மாநிலத்தில் அதிக அளவில் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமை லியோவுக்கு கிடைத்துள்ளது. படம் வெளியான நாளிலிருந்து 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.