நாளை லியோ வெற்றி விழா... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
null#Thalapathy oda kutty story illama epdi nanbaa 🎙️🎤#Leo🙊sry parthiban's moththa family & crew is coming for you all ❤️#TheRoarOfLeo - Bloody sweet Victory 🦁
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023
Tomorrow 🔥
P.S. Intha vaati miss aagaathu👍#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/KESdWKvHOv
லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை வெற்றி விழா நடைபெற உள்ளது. போலீசார் அனுமதியுடனும் பாதுகாப்புடனும் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.