‘LGM‘ டிரெய்லரை வெளியிடும் தோனி... பிரம்மாண்டமாய் நடைபெறும் இசை வெளியீட்டு விழா !

lgm

‘LGM‘ படத்தின் டிரெய்லரை மனைவியுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் தோனி வெளியிடவுள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரரான தோனி, தனது  ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் முதல்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். ‘எல்ஜிஎம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ இவானா நடித்துள்ளார். 

lgm

மேலும் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்க்ளில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

lgm

 அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஜூலை 10-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவரும் இணைந்து டிரெய்லரை வெளியிடவுள்ளனர். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story