கைகோர்ப்போம் துயர்துடைப்போம்... நடிகர் விஜய் வேண்டுகோள்...

கைகோர்ப்போம் துயர்துடைப்போம்... நடிகர் விஜய் வேண்டுகோள்...

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு அரசுடன் சேர்ந்து இயன்ற உதவிகளை செய்யுமாறு, மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மிச்ஜாம் புயலால் இடைவிடாமல் பெய்த கன மழையினால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கைகோர்ப்போம் துயர்துடைப்போம்... நடிகர் விஜய் வேண்டுகோள்...

இந்நிலையில், மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யக்கோரி நடிகர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை சரி செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியது. வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் விஜய் பதிவிட்டுள்ளார். 
 

Share this story