தூள் கிளப்பிறலாம் கண்ணா... லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையைக் கேட்டு ரஜினி உற்சாகம்...

தூள் கிளப்பிறலாம் கண்ணா... லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையைக் கேட்டு ரஜினி உற்சாகம்...

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,  ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். 

தூள் கிளப்பிறலாம் கண்ணா... லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையைக் கேட்டு ரஜினி உற்சாகம்...

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜிடம், கதையை கேட்டுவிட்டு ரஜினி சொன்ன பதில் என்ன கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், கதை அவருக்கு மிகவும் பிடித்ததாகவும், தூள் கிளப்பிறலாம் கண்ணா என உற்சாகமடைந்து பேசியதாகவும் தெரிவித்தார் 

Share this story