சென்னை போலீசாருக்கு லியோ பட தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது

சென்னை போலீசாருக்கு லியோ பட தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது

LEO இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இசை வெளியீட்டு விழா ரத்தானதாக படக்குழு அறிவித்திருந்தது. அது தொடர்பான தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் ஒன்று வௌியாகியுள்ளது.

சென்னை போலீசாருக்கு லியோ பட தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது

இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ம் தேதி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது!

Share this story