பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘LGM‘ இசை வெளியீட்டு விழா.. இயக்குனருக்கு அட்வைஸ் செய்த ‘தல’ தோனி !
பிரபல கிரிக்கெட் வீரரான தோனி, தனது ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் முதல்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். ‘எல்ஜிஎம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ இவானா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்க்ளில் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி் வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு ‘LGM’ படத்தின் ஆடியோவை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தோனி, படத்தின் விமர்சனங்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய செயல்முறையை பின்பற்றுங்கள் என இயக்குனர் ரமேஷ் தமிழ் மணிக்கு தோனி அறிவுரை கூறினார்.