‘LGM’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் எம். எஸ் தோனி.

photo

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும்எல் ஜி எம்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

photo

கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. தற்போது திரைத்துறையில் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலமாக  தமிழில் முதல் தயாரிப்பாக  எல்ஜிஎம்எனப்படும்லெட்ஸ் கெட் மேரிட்என்ற படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

photo

அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்நிலையில்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை எம்.எஸ் தோனி வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஹரிஸ் கல்யாண் என்னை திருமணம் செய்துகொள்வாயா? என்பது போல அப்பாவியாக மோதிரத்தை நீட்டுகிறார். நதியா மற்றும், இவானா அவரை முறைத்து பார்கின்றனர்.

 

Share this story