‘தோனி நடித்தால் அது ஆக்ஷன் படமாக இருக்கும்’ - ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி

lgm

தோனி நடிக்க வந்தால் அது ஆக்ஷன் படமாகதான் இருக்கும் என்று அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். 

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்த நடித்துள்ள திரைப்படம் ‘எல்ஜிஎம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி்யுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

lgm

 தற்போது ‘எல்ஜிஎம்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய தோனியின் மனைவி சாக்ஷியிடம், தோனி நடிகராக வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கேமரா முன் வெட்கப்படுவதில்லை, அவருக்கு நடிக்கத் தெரியும். 2006-ஆம் ஆண்டிருந்து கேமரா முன் நடித்து வருகிறார். தோனியை வைத்து படம் எடுத்தால் அது ஆக்ஷன் படமாக தான் இருக்கும் என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், நல்ல விஷயங்கள் குறித்து சொல்லக் கூடிய கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பது குறித்து அவர் பரிசீலிப்பார். சினிமா துறைக்கு வரவேண்டுமென்று நினைத்தது என்னுடைய யோசனை தான் என்று அவர் கூறினார். 

 

Share this story