சோபா சிறுவனுடன் ஃபன் செய்த எல்.ஐ.சி. படக்குழு

சோபா சிறுவனுடன் ஃபன் செய்த எல்.ஐ.சி. படக்குழு

கோமாளி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அச்சிறுவன் சோபா விற்பது போல, நடிகர், நடிகை மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை வசனம் பேசி விற்க முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை நடிகை நயன்தாராவும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Share this story