லிங்குசாமி, வெற்றிமாறன், சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்

லிங்குசாமி, வெற்றிமாறன், சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்

லிங்குசாமி மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக சூரி நடிக்கிறார்.

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் இவர் இயக்கிய பீமா, அஞ்சான், வாரியர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனிடையே திருப்பதி பிரதர்ஸ் எனும் விநியோக நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை விநியோகித்தும் வந்தார்.  இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில், கதாநாயகனாக சூரி நடிக்க இருப்பதாகவும், படத்திற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story