இந்த ஆண்டு தோல்வியடைந்த பெரிய படங்கள் -வெற்றி பெற்ற பட்ஜெட் படங்கள் பட்டியல் .

maman
கடந்த 6 மாதங்களில் கோலிவுட்டில் வெளியான 122 படங்களில் 114 படங்கள் தோல்வி அடைந்துள்ளன. வெற்றி பெற்ற 8 படங்களில் 7 சிறு பட்ஜெட் படங்கள் ஆகும்.ஜனவரியில் வெளியான படங்களில் ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன. மற்ற படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின.
விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில், விஷால் உடன் சேர்ந்து சந்தானம், ஆர்யா, சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து போக, மொத்தம் 54 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல விமர்சனங்களை பெற்று படம் வெற்றி பெற்றது. 
புதுமுக இயக்குனர் அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி. கடந்த மே 1ஆம் தேதி இந்த படத்துடன் சேர்த்து ரெட்ரோ படமும் வெளியானது. சூர்யா நடித்திருந்த அந்த படத்தை காட்டிலும், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
சூரி ஹீரோவாக நடித்திருந்த படம், மாமன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்த இந்த படம், குடும்ப பின்னணியையும், அதில் இருக்கும் பாசத்தையும் சொன்ன படமாக இருந்தது. இது வெற்றி படமாக இருந்தது 
அதர்வா-நிமிஷா சஜ்ஜயன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம், DNA. குழந்தை கடத்தலையும், அதை மீட்க தாய்-தந்தை படும் பாசப்போராட்டத்தையும் காண்பித்த படமாக இது இருந்தது.
 ரிலீஸிற்கு பின் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

Share this story