லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு... அடையாளமே தெரியாமல் மாறிய துள்ளுவதோ இளமை பட நடிகர்...!

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய் லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிநய். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார். ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அவர், அதன் பின் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். வில்லன் நடிகர்களுக்கு டப்பிங் பேசி பிரபலமானார். அந்த வகையில், துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார். ஆனால் சில வருடங்களாக இவர் சினிமா மற்றும் விளம்பரங்களில் பெரிதாக காணவில்லை.
இந்நிலையில், இவரது நிலை தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லிவர் சிரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் அபினவ். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் உதவி செய்யுமாறு உருக்கமாக அனைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.