லியோனி மகன் ஹீரோவாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்-சிம்புவின் பங்கு என்ன தெரியுமா ?
திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ என்ற படம், இதன் டிரெய்லரை சிம்பு வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். சுசீந்திரன் உதவியாளர் நானி எழுதி இயக்க, அசாசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரிகிடா சாகா, ராதிகா, காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் நடித்துள்ளனர்.
சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் இணைந்து தயாரிக்க, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து லியோ சிவகுமார் கூறுகையில், ‘அம்மா ராதிகாவுக்கும், அவரது மகனான எனக்கும் இடையிலான பாசத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. சாதாரண டெலிவரி பாயான என் வாழ்க்கையில், திடீரென்று குறுக்கிடும் ஏழு பேரின் செயல்களால் என்ன பிரச்னை ஏற்படுகிறது என்பது கதை’ என்றார்.

