ரஜினியின் கூலிக்கு அடுத்து ஹிந்தி படம் இயக்கும் லோகேஷ் கனகராஜ்

lokesh kanagaraj

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", மற்றும் இளைய தளபதி விஜய்யுடன் "மாஸ்டர்", "லியோ" மற்றும் கார்த்தியுடன் "கைதி" போன்ற அதிரடி மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை எடுத்தவர். இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைய இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் .நிச்சயமாக இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .
இப்போது லோகேஷ் ரஜினியை வைத்து கூலி படம் எடுத்து வருகிறார் .இந்த படத்திலும் அமீர்கான் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் 
இதுகுறித்து சமீபத்தில் நடிகர் அமீர்கான் அளித்த பேட்டியில், இந்த தகவலை உறுதிப்படுத்தினார். லோகேஷும் நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளோம். அது ஒரு சூப்பர் ஹீரோ படம். பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக அது உருவாகும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அமீர்கான் தெரிவித்தார். சூர்யா நடிப்பதாக இருந்த இரும்புக்கை மாயாவி படத்தை தான் அமீர்கானை வைத்து லோகேஷ் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு இது ஒரு பெரிய மைல் கல் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .

Share this story