தி கோட் மாபெரும் வெற்றி பெறட்டும்.. இயக்குநர் லோகேஷ் - அட்லீ வாழ்த்து
1725450343000
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். நாளை (செப்டம்பர் 5) வெளியாகி இருக்கும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தி கோட் படத்திற்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகியோர் கூட்டாக இணைந்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தி கோட் படத்திற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. இந்த படம் வெற்றி பெற இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் புரொடக்ஷன், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது பாய்ஸ் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ," என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations for the Blockbuster Goat
— atlee (@Atlee_dir) September 4, 2024
From your boys @actorvijay Anna https://t.co/gLtUsGiDGl
Congratulations for the Blockbuster Goat
— atlee (@Atlee_dir) September 4, 2024
From your boys @actorvijay Anna https://t.co/gLtUsGiDGl