கொண்டாட்டத்தில் விபரீதம்: ரசிகர்களால் மருத்துவமனையில் லோகேஷ் கனகராஜ்.

photo

லியோ படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

photo

லியோ படம் ரசிகர்களின் ஆராவாரத்துக்கு மத்தியில் கடந்த 19ஆம் தேதி வெளியானது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை கால விடுமுறையில் படம் வெளியாகியுள்ளாதால் வசூலிலும் ஜொலித்து வருகிறது. படம் வெளியாகி 5நாட்கள் முடிந்துள்ள நிலையில் உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து விரைவில் 500  கோடியை எட்டவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


இந்த நிலையில் கேரள மாநிலம் பாலகாட்டில் உள்ள அரோமா தியேட்டரில் ஞாயிறு அன்று ஒளிபரப்பான காட்சியில் லியோ படத்தை சிறப்பிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனேயே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தகவல் சமூகவலைதளத்தில் வெளியாகி லோகேஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Share this story