‘வாரிசு’ ரிலீசுக்காக காத்திருந்தேன்... இனிதான் சரவெடி - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் !

lokesh kanagaraj

‘தளபதி 67’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் இன்று காலை வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் ‘வாரிசு’ படத்தை கொண்டாடி வருகின்றனர். 

lokesh kanagaraj

இந்த படத்தை பிரபலங்களும் பார்த்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘வாரிசு’ படத்தை பார்த்தார். பின்னர் திரையரங்கிற்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பில் ‘தளபதி 67’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தளபதி 67 படத்தின் அப்டேட் இனிமேல் அடுத்தடுத்து வெளியாகும். வாரிசு படம் வெளியாகதான் இத்தனை நாட்கள் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார். கடைசியாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story