“உயிர விடற அளவுக்கு சினிமாவுக்கு அவ்வளவு முக்கியம் தர தேவையில்லை” – ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த இயக்குநர் கோகேஷ்.

photo

இளைஞர்களுக்கு ஆஸ்தான இயக்குநரான வலம்வரும் லோகேஷ்கனகராஜ் தற்போதைய அளித்துள்ள பேட்டி வைராகிவருகிறது.

photo

மாநகரம் தொடங்கி விக்ரம் வரை லோகேஷ் எடுத்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட், அதிலும் கமல் நடித்த விக்ரம் இண்டஸ்ரிடியல் ஹிட்டான திரைப்படம். தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தளபதி 67’ திரைப்படத்தை இயக்கவுள்ளார், படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம், நேற்றைய  தினம் விஜய்யின் வாரிசு படத்தை ஒரு ரசிகனாக வந்து பார்த்துவிட்டு சென்ற கோகேஷ், தற்போது கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

photo

அதில் அவர் கூறியதாவது:” ‘தளபதி 67’ குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும், தொடர்ச்சியாக  படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றார், அதே போன்று ரசிகர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும், இது வெறும் சினிமாதான். உயிரை விட்ற அளவுக்கு சினிமா அவ்வளவு முக்கியமில்லை, சந்தோஷமா படத்த பாத்துட்டு பத்திரமா வீட்டுக்கு போனால் போதும், உயிர் போற அளவுக்கு கொண்டாட்டம் தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.

Share this story