‘ஜோ’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய முன்னணி இயக்குநர்கள்.

photo

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் இருவரும் நேற்று ஜோ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

photo

ஹரிஹரன்ராம்   இயக்கத்தில் கடந்த 24ஆம் தேதி வெளியான படம் ஜோ. இந்த படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க அவர்களுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு உள்ளிட்ட நடித்துள்ளனர். படம் ரசியகர்கள் மத்தியில் நல்ல வரவேற்று வருகிறது. இந்த நிலையில் ஜோ படத்தை கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் படக்குழுவுடன் இணைந்து பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை பகிர்ந்துள்ளனர்.

photo


அதன்படி இயக்குநர் நெல்சன் “ ஜோ படத்தை மிகவும் ரசித்தேன் வேடிக்கையான ரோலர் கோஸ்டர் உணர்ச்சிகளுடன் படம் உள்ளது, படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்” ஜோ படம் பார்த்தது இனிமையான உணர்வை கொடுக்கிறது. அனைவரின் உழைப்பும் அழகாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள் “ என பதிவிட்டுள்ளார்.

Share this story