சூப்பர் ஸ்டாருக்காக சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்... 'தலைவர் 171' குறித்து புதிய அப்டேட்

thalaivar 171

 நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதனால் அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் உள்ளார். அதனால் தனது அடுத்த படங்களின் இயக்குனர்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார். 

thalaivar 171

அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதையடுத்து 'ஜெய் பீம்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். 'தலைவர் 171' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம்  'லியோ' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதை முடித்து ப்ரீ பிரொடக்ஷன் பணிகளை தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story