லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு ட்ரீட்.. கூலி படப்பிடிப்பு படங்கள் ரிலீஸ்..

lk

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு,  கூலி ஷூட்டிங் படங்கள் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அனைத்து படங்களுமே வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் அடித்தன.அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து  சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ வைரலாக நிலையில், தற்போது ஷூட்டிங் படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் கூலி படக்குழு உடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

Share this story

News Hub