"கூலி" படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்...!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை "கூலி" படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
#LokeshKanagaraj celebrating his birthday with #Coolie team🎉🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) March 13, 2025
Expecting some updates from Coolie, as his birthday special 🤩pic.twitter.com/ZDNfOyTXc4
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது பிறந்தநாளை கூலி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.