முகநூல் பக்கம் முடக்கம் குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம்

முகநூல் பக்கம் முடக்கம் குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம்

விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சனம் மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் லியோ படம் வெற்றி பெற்றது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்தது.  படம் வெளியாகி ஒருமாதம் கடந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்தும் உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் இயக்கும் இப்படத்தில் விஜய் குமாருடன் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வரும் 15-ம் தேதி வெளியாகிறது.

முகநூல் பக்கம் முடக்கம் குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம்

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முகநூல் பக்கத்தில் பல ஆபாச வீடியோக்கள் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த பக்கமும் திடீரென முடங்கியது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள லோகேஷ் கனகராஜ், முகநூல் பக்கத்தில் தனக்கு கணக்கு இல்லை என்றும், அது போலி கணக்கு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 

Share this story