லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் இணையும் புதிய படம்!

Lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜின் ‘எல்சியு’ படங்களின் வரிசையில் அடுத்ததாக ‘பென்ஸ்’ திரைப்படம் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் ‘எல்சியு’ படங்கள் என்ற வரிசை உருவானது. அந்தப் படத்தின் கதையின் தொடர்ச்சி, கதாபாத்திரங்களை ஒன்றிணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கும். இதில் இதுவரை ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து இதில் ‘பென்ஸ்’ படமும் இடம்பிடிக்கவுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க மட்டுமே செய்கிறார். லாரன்ஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இதனை லோகேஷ் கனகராஜுடன் இணைந்து சுதன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் தயாரிக்க இருக்கிறார்கள்.
 

இந்தப் படத்தின் மூலம் எல்சியு கதாபாத்திரங்களுக்குள் லாரன்ஸும் இணைய இருக்கிறார். இதுவரை கமல், விஜய், சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ், உள்ளிட்ட பலர் எல்சியு கதாபாத்திரங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘கூலி’ படத்தினை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். எல்சியு படங்களின் இறுதியாக ‘விக்ரம் 2’ இருக்க வேண்டும் என்பது லோகேஷ் கனகராஜின் முடிவு.

Share this story