அதற்காகத்தான் ''மோனிகா'' பாடல்... உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "கூலி" திரைப்படத்திற்கு "A" தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் 2 மணி 48 நிமிடம் ஓடும் எனவும் தெரியவந்துள்ளது.
இப்படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எனது படங்களில் பொதுவாக ஐட்டம் பாடல்கள் இருக்காது. ஆனால் கூலி படத்தில் மோனிகா பாடலை வணிக நோக்கங்களுக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் படத்தின் வேகத்தை தடுக்காது” எனக் கூறியுள்ளார்.

