கமல்ஹாசனை மீண்டும் இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

kamal

‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை இயக்கினார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘கூலி’ படத்தை முடித்ததும் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.kamal

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், “கமல்ஹாசன் படத்தை இயக்கியது எனக்கு பெரிய அதிர்ஷ்டம். மீண்டும் ஒருமுறை அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். அது ‘விக்ரம் 2’ படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share this story