சோஷியல் மீடியாவிலிருந்து ப்ரேக் எடுத்த ‘லோகேஷ் கனகராஜ்’.

photo

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூகவலைதளங்களிலிருந்து  சில காலம் ப்ரேக் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

photo

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் , லியோ ஆகிய படங்கல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அதிலும் விக்ரம் அதிரிபுதிரி ஹிட் . இவர் இயக்குநராக மட்டும் இல்லாமல் தற்போது ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் தயாரித்த ‘ஃபைட் கிளப் படத்தை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தான் சிலகாலம் சமூகவலைதளங்களிலிருந்து ப்ரேக் எடுக்கப்போவதையும் அறிவித்துள்ளார். தொடர்ந்து பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவிட்டியை தள்ளிங்கள் என பதிவிட்டுள்ளார். அடுத்த படத்தின் கதையை எழுத துவங்கியுள்ளதால் இதனை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story