சிபி சத்யராஜின் பட ட்ரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

Ten hours
அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கியுள்ளன. சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இந்நிலையில், டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரை நாளை காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார் என்று சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


 

Share this story