லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு ப்ரோமோ ரிலீஸ்
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருபவர். அந்த வகையில் இவர், மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்றார். அதன் பின்னர் மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
Here’s the announcement of #MrBhaarath 🔥🔥https://t.co/OnJczS6cxl
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 18, 2024
Kicked to collaborate with talents @Bhaarath_Offl, @Niranjan_Dir, @samyukthavv and the entire team for this exciting project ❤️❤️❤️
Need all of your lovely support and wishes like always 🙏❤️@Jagadishbliss… pic.twitter.com/duf5xbtkxS
அந்த வகையில் ஏற்கனவே ஃபைட் கிளப் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று (டிசம்பர் 18) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், யூடியூபர் பரத் கதாநாயகனாக நடிப்பதாகவும் நிரஞ்சன் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.