புத்தகங்களாக தயாரான லோகேஷின் படைப்புகள் – புத்தக விழாவில் ஸ்பெஷல்.

photo

இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குநராக சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள லோகேஷின் படைப்புகள் தற்போது புத்தகங்களாக வெளியாகியுள்ளது.

photo

photo

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்துதளபதி 67’ திரைப்படம் தயாராகி வருகிறது. தற்போது விஜய்யின் ‘வாரிசு’ படம் வெளியாகவுள்ளதால், படத்தின் வெளியீடிற்கு பின் தளபதி 67 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

photo

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் திரைக்கதை புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது. இப்புத்தகங்கள் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story