கூலி படத்தில் பிரபல ஹீரோ வில்லனா? லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?

Rajini


ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த் . படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது. இந்தச் சூழலில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோல்) படம் வெளியானது. அடுத்ததாக வேட்டையன் படத்தில் கமிட்டானார். படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஷூட்டிங் ஓவர்: வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ரஜினிகாந்த்தும் முழு மூச்சுடன் அதில் நடித்துவந்தார். படத்தில் அவருடைய போர்ஷனுக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் டப்பிங் பணிகளும் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

Cooli

இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குகிறார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

nagarjuna

இதற்கிடையே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோரிடம் லோகேஷ்  பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கூலி படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் நாகார்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this story