‘லியோ’ படம் குறித்து அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்த ‘லோகேஷ்’.

photo

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘லியோ’ திரைப்படம். ரசிகர்கள் இந்த அளவிற்கு படத்தை எதிர்நோக்கி இருக்க  நடிகர் விஜய் ஒரு காரணம் என்றாலும் படத்தின் இயக்குநரான லோகேஷ் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் ரசிகள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதும் மற்றுமொரு காரணம் எனலாம். இந்த நிலையில் இன்று கோவையில்  தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷிடம் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதில் லியோ குறித்தும் தளபதி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. எல்லா கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதில் கொடுத்துள்ளார் லோகேஷ். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி முடிந்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.


அதன்படி, படத்தின் ஆடியோலான்ச் குறித்த கேள்விக்கு ‘செப்டம்பர் மாதம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் இருக்கும்’ என கூறியுள்ளார்.  அடுத்ததாக படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது என்ற கேள்விக்கு ‘ லியோ மற்ற படங்கள் மாதிரி இல்லை, கைதி மாதிரியான ஒரு படம் இது’ என கூற அனைவரும் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.  அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கூறியதைபோல இந்த LCU உட்பட 10 படங்களுக்கு இயக்கிய பின்னர் சினிமாவை விட்டு விலகிவிடுவதாக மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளார்.

Share this story