‘மாஸ்டர்’ மாதிரி கிடையாது ‘தளபதி67’ – உண்மையை வெளியிட்ட லோகேஷ்.

photo

கோலிவுட்டில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக வலம்வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய தனது சினிமா பயணத்தில்  கைதி, மாஸ்டர், விக்ரம் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மிக பிரபலமானார். இந்த நிலையில் தனது அடுத்த படத்தை தளபதி விஜய்யை வைத்து இயக்க உள்ளார்.

photo

இந்த நிலையில் படம் குறித்த அடுத்த தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது படத்தின் இயக்குநரான லோக்கேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இந்த படம் முழுக்க முழுக்க என்னுடைய 100 சதவிகிதமக இருக்கும், யாருக்கும் சமரசம் செய்து கொள்ளாமல் எனது பாணியில் எடுக்க தயாராக இருப்பதாக அவர்  தெரிவித்துள்ளார்.

photo

இதற்கு முன்னர் பெரிய ஹீரோ படம் என்பதால் விஜய்யின் மாஸ்டர் கதையில் சமரசம் செய்ததாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லோகேஷின்  ‘தளபதி67’  படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து  ஆவலாக காத்துள்ளனர்.

Share this story