‘ வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்து படம் பண்ணுவேன்’ விருப்பத்தை தெரிவித்த லோகேஷ் கனகராஜ் – உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

photo

இன்றைய காலகட்டத்தில் சினிமா சமூகத்தில் முக்கிய ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது காரணம் மக்களின் வாழ்வியல் தொடங்கி எதார்த்தமான கதைகளத்துடன் பயணிப்பதுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பலர் ரசிகர்களின் விருப்பமான இயக்குநர்களாக உள்ளனர். இந்த  வரிசையில் லோகேஷ் கனகராஜுக்கு தனி இடம் உண்டு. தற்போது லோகேஷ் தளபதி விஜய்யை வைத்து தரமான சம்பவத்திற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில் லியோ படத்தின் சூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். நிலவரம் இப்படி இருக்க கோவையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் இன்று கலந்துகொண்ட நிலையில் அவரிடம் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


அதில் ஒருவர்’ தளபதியை வைத்து படம் பண்ணியாச்சு? அடுத்து தல படத்தை எப்போ இயக்க போறீங்க?’ என கேட்கிறார். அதற்கு லோகேஷ்’ வாய்ப்பு கிடைத்தால் பண்ணுவேன்’ என்கிறார். தொடர்ந்து ‘அந்த படம் LCUகுள் வருமா?’ என  அந்த ரசிகர் கேட்க ‘,’ முதலில் வாய்ப்பு கிடைக்கட்டும்’  என லோகேஷ் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share this story