தீவிர ரஜினி ரசிகரா இருப்பார் போல ! தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொன்ன ருசிகர தகவல்..!

1

ஞானவேல் ராஜாவிடம் வேட்டையனோடு கங்குவா திரைப்படத்தை எப்படி ரிலீஸ் செய்ய நினைத்தீர்கள் என்ற ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஞானவேல் ராஜா இதைப்பற்றி நானே ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என நினைத்தேன். வேட்டையன் படத்தின் டார்கெட் தீபாவளி. அதனால் தீபாவளியை டார்கெட் செய்து அவர்கள் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அக்டோபர் 10 ஆம் தேதியில் எந்த ஒரு படமும் இதுவரை பிளான் செய்யவில்லை. அதற்கு மேலாக என்னுடைய பிறந்த நாளை விட ரஜினியின் பிறந்தநாளுக்கு தான் நான் கோயிலுக்கு சென்று 108 முறை கோயிலை சுற்றி வருவேன்.

அந்த அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன் நான். அப்படி இருக்கும்போது எப்படி சார் ரஜினி படத்தோடு என் படத்தை மோத விடுவேன். ஆனால் சோசியல் மீடியாவில் இப்படியான செய்தி வருகிறது என்றால் அவர்கள் இதை வைத்து காசு பார்க்க இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் என ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

அப்போ கங்குவா படத்துடன் வேட்டையன் மோதாதா..? என்ன ஞானவேல் ராஜா சார் இப்படி கொழப்புறீங்க


 

Share this story