ஹரிஷ் கல்யாணிற்காக, கிளாமர் லுக்கில் லாஸ்லியா……’என்ன லாஸ் இதெல்லாம்?’

லாஸ்

இலங்கையின் செய்திவாசிப்பாளராக இருந்து தமிழ் பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொண்டபின் தமிழகத்தின் கனவு கன்னியாக வலம் வரத் துவங்கினார் லாஸ்லியா. பிக்பாஸில் கவினுடன் இவருக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும், இவருக்கான ரசிகர் கூட்டத்திற்கு குறைவு இல்லை என்றே சொல்ல வேண்டும். அதே போன்று இவர் பிக்பாஸிற்கு பிறகு தனது முதல் படமே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பூர்த்தி செய்யவில்லை.   

los

இதையடுத்து  கே.எஸ் ரவிகுமார் தயாரித்து நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்தார். அந்த படமும் இவருக்கு பெரிய வரவேற்பை தரவில்லை. தற்பொழுது லாஸ்லியா  ‘அன்னபூரணி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட  இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது.

loss

இந்த நிலையில் தற்பொழுது லாஸ்லியாவின் புதிய கிளாமர் புகைப்படம் வெளியாகியுள்ளது, சமீபத்தில் நடந்த ஹரிஷ் கல்யாண் ரிசப்ஷனுக்காக இவர் இவ்வாறு உடை அணிந்து சென்றுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’லாஸ்லியா பெரிய நடிகருடன் ஜோடி போட டிரை பண்றாங்க போல, அப்போ இனிமே இன்ஸ்டால போட்டோவும் இனி இப்படிதான் வருமா?’ என பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story