லாஸ்லியா நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' ஓடிடியில் வெளியீடு

losliya

லாஸ்லியா நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' ஓடிடியில் வெளியானது. 

பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. losliya

இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா, டென்ட் கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் காண  முடியும். இந்தப் படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.

Share this story