அயலான் படத்தால் கோடிக்கணக்கில் இழப்பு

அயலான் படத்தால் கோடிக்கணக்கில் இழப்பு

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி உள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

அயலான் படத்தால் கோடிக்கணக்கில் இழப்பு

இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாததால், விநியோகஸ்தர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அயலான் திரைப்படம் சுமார் 55 கோடிக்கு மேல் வசூல் செய்தது.  ஆனால், படம் 34 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Share this story