நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது லவ் திரைப்படம்
1694096954191
பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான லவ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மிரள் திரைப்படத்திற்கு பிறகு பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் லவ். மலையாள படத்தின் ரீமேக் திரைப்படமான இந்தப் படத்தை ஆர் பி பாலா இயக்கியிருந்தார். இதில் பரத் மற்றும் வாணி போஜனுடன் இணைந்து ஸ்வயம் சித்தா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர் பி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், லவ் திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.