‘லவ் டுடே’ பாணியில் மீண்டும் ஒரு படம்... புதிய படத்தை இயக்கும் பிரதீப் ரெங்கநாதன் !

pradeep ranganathan

 ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். 

pradeep ranganathan

2k கிட்ஸ்களின் சமகால காதல் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான கதை தற்போது அவர் தயார் செய்து வருகிறாராம். இன்ஜினியர் மாணவர்கள் கதைக்களம் கொண்ட இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Share this story