இந்தியில் ரீமேக்காகும் ‘லவ் டுடே’.... மேக்கிங் வீடியோ வெளியீடு !

love today

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்கால காதலை பேசிய இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. 

love today

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றதால் இந்த படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ‘துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை அவர் மறுத்துவிட்டார்.

love today

இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் அதிகாரப்பூர்வமாக ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான Phantom Studios இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளது. விரைவில் மற்ற விபரங்களை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதோடு இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. ‘லல் டுடே’ படத்திற்காக உழைத்த படக்குழுவினருக்கு நன்றி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Share this story